News January 23, 2025
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும்: வானதி

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்து கோயில்களை மட்டும் தன் பிடியில் வைத்திருக்கும் திமுக அரசு, இந்துக்களை ஏமாற்றுவதற்காக, ‘முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது. முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து டிச.24 மாலை புறப்படும் பெங்களூரு – கண்ணூா் சிறப்பு ரயில் மறுநாள் காலை கண்ணூரை சென்றடையும். மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து டிச.25 காலை புறப்படும் கண்ணூா் – பெங்களூரு சிறப்பு ரயில் அன்றிரவு பெங்களூரை சென்றடையும். இந்த ரயிலானது போத்தனூர் வழியாக இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
கோயம்புத்தூரில் கத்திக்குத்து

கோவையைச் சேர்ந்த தனசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவர் பணிபுரியும் அதே நிறுவனத்தில் செந்தில்குமார் (42) என்பவரின் மனைவி வேலை செய்தார். அவர் கணவர் செந்தில்குமார், போதையில் டார்ச்சர் செய்வதாக, தனசேகரிடம் கூறியுள்ளார். அவருக்கு தனசேகர் ஆறுதல் கூறி வந்தநிலையில், இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தனசேகரை செந்தில்குமார் கத்தியால் குத்தியுள்ளார். பின் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.
News December 24, 2025
கோவை: DRIVING தெரிந்தால் அரசு வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே<


