News March 28, 2024
திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 25, 2025
நவ.27ல் மதுரையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நவம்பர் 27 காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் குறைகளை நேரிலும் மனுக்களாகவும் ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
மதுரை: டிச. 5ல் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரையில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் 14வது ஆண்கள் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுக்காக, டிசம்பர் 5 அன்று அலங்காநல்லூர் அருகே உள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
News November 25, 2025
மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


