News April 16, 2024
திருப்பத்தூர்: 2 நாள் விடுமுறை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வரும் 21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே தினம் 1ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி, மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
திருப்பத்தூர் மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
திருப்பத்தூர்: 6 பேர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சேர்ந்த கவிதா என்பவர் நேற்று (நவ.22) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி ஷெட் அருகே எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது இதனால் ஆட்டோவில் பயணம் செய்த கவிதா, காஞ்சனா, சென்றாயன், பிரகாஷ் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.


