News August 17, 2024

திருப்பத்தூர் விவசாயிகள் பகிரங்க குற்றசாட்டு

image

திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் மூலம் நீர் பாசன குழாய் அமைத்து கொடுக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் பெயரில் ஆவணங்களை பெற்று கொண்டு சரியாக குழாய்களை அமைக்காமல் அமைந்தது போன்று படம் பிடித்து மோசடி செய்வதாக குற்றம் சாட்டினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் உறுதியளித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சுதந்திர தினமான 15.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி உத்திரவு பிறப்பித்துள்ளார்.

News August 9, 2025

திருப்பத்தூர்: தேவையற்றை மெஸேஜ் வருகிறதா?

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் வரும் செய்திகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் 1930 என்ற இந்த எண்ணிற்கோ அல்லது இந்த <>இணைதளம்<<>> வாயிலாகவோ புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் 95.60 மில்லிமீட்டர் மழை பொழிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று (ஆக.08) கனமழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 24.20 மில்லி மீட்டர் மழையும், வாணியம்பாடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் மொத்தம் 95.60மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும் மழையால், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!