News March 24, 2024
திருப்பத்தூர்: வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News November 19, 2024
இன்றைய ரோந்து பணி காவலர்களின் விவரம் 2/2
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், காவலூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (19.08.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
News November 19, 2024
பெரிய கண்ணாலம்பட்டி பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் அடுத்த பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் நூலகம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் மதிய உணவின் தரம் குறித்து இன்று (நவ.19) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 19, 2024
திருப்பத்தூரில் ரேஷன் கடை விற்பனையாளர் நேர்முக தேர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகிற 25-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் நேர்முக தேர்வு பொதிகை கல்லூரியில் நடைபெறுகிறது. நேர்முக தேர்வில் பங்கேற்க அனுமதி சீட்டு, கல்வி தகுதி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.