News March 24, 2025
திருப்பத்தூர்: வங்கியில் ரூ.1.30 கோடி மோசடி

திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42. இவர் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2011- 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. புகாரின்பேரில் திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.
Similar News
News December 2, 2025
திருப்பத்தூரில் வீடு தேடி ரேஷன் பொருள் வரும்!

திருப்பத்தூரில் முதியோர் நலனை உறுதி செய்ய மாநில அரசு செயல்படுத்தும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே அத்தியாவசிய உணவுப் பொருள் தொகுப்புகள் வழங்கப்படுகிறது. டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் இந்த நலத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <
News December 2, 2025
ஆம்பூர்: திருமணம் ஆகவில்லை ஏக்கத்தில் தற்கொலை

ஆம்பூர் இந்திரா நகர் ஜவஹர்லால் நேரு நகர் பகுதி சேர்ந்த பாலாஜி (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை என்கின்ற ஏக்கத்தில் (நவ.30) மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


