News August 3, 2024
திருப்பத்தூர் ராட்சத ராட்டினத்தில் 50 பேர் மீட்பு

திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை கிராமத்தில் ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டது. இதில் ராட்சத ராட்டினம் எதிர்பாராத விதமாக திடீரென்று இன்று இரவு சாய்ந்தவாறு இருந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பதறிப் போய் கத்தினர். தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக 50க்கும் மேற்பட்ட உயிர்களை காயமின்றி காப்பாற்றினர். இதையடுத்து திருப்பத்தூர் காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிகிறது.
Similar News
News September 9, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூர் நகராட்சி வார்டு 30 திருப்பத்தூர் ஒன்றியம் டி.கிருஷ்ணாபுரம், குரும்பகேரி ஊராட்சிகள் ஜோலார்பேட்டை செட்டியப்பனூர் ஊராட்சி, கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி, சின்ன கசிநாயக்கன்பட்டி ஊராட்சிகள் மாதனூர் கண்ணாடி குப்பம், விண்ணமங்கலம் ஊராட்சிகள் நாட்றம்பள்ளி, நாராயணபுரம் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் இன்று(செப்.9) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 8, 2025
திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
திருப்பத்தூர்: சிலிண்டர் மானிய நிலையை எளிதாக அறிய வழி

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.