News August 25, 2024
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் விசிக தலைவரை சந்தித்து வாழ்த்து

திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் நேற்று(ஆக 24) சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Similar News
News October 14, 2025
உலக சாதனை படைத்த திருப்பத்தூர் மாணவர்கள்

கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரத்தில் நடைபெற்ற கேல் ரத்னா மாபெரும் உலக சாதனை நிகழ்வில், திருப்பத்தூரைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனை படைத்துள்ளனர். திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் அகாடெமியைச் சேர்ந்த மாணவர்கள், 45 நிமிடம் நிறுத்தாமல் கராத்தே மற்றும் சிலம்பம் செய்து அசத்தியுள்ளனர். அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
News October 13, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி போலீசாரின் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு உதவி பெறலாம் என மாவட்டம் காவல் துறை அறிவித்துள்ளது.
News October 13, 2025
திருப்பத்தூர் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க, இன்று போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பதிவிட்டுள்ளனர். அதில், வாகனத்தில் செல்லும் போது, சரியான வேகத்தில் செல்ல வேண்டும், அதிவேகம் விபத்தை ஏற்படுத்தி உயிர் சேதத்தை உருவாக்கும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*