News June 26, 2024
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இன்று காலை 9.10 மணியளவில் காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வளாகம் வரையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சுதந்திர தினமான 15.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி உத்திரவு பிறப்பித்துள்ளார்.
News August 9, 2025
திருப்பத்தூர்: தேவையற்றை மெஸேஜ் வருகிறதா?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் வரும் செய்திகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் 1930 என்ற இந்த எண்ணிற்கோ அல்லது இந்த <
News August 9, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் 95.60 மில்லிமீட்டர் மழை பொழிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று (ஆக.08) கனமழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 24.20 மில்லி மீட்டர் மழையும், வாணியம்பாடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் மொத்தம் 95.60மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும் மழையால், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.