News December 30, 2024
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 6, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற வாராந்திர திங்கட்கிழமை குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 240 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பெற்றுக் கொண்டார்.
News January 6, 2025
ஓடும் ரயிலில் இறங்க முயற்சித்த போது தவறி விழுந்து பலி
ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ஜெய் மாதா நகரைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பதற்கு முன்பு ஓடும் ரயிலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் விசாரணை செய்கின்றனர்.
News January 6, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஸ்கரப் டைபஸ் பரவல் இல்லை
திருப்பத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதனால் ‘ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா பரவுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இந்த வகை வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், ஸ்கரப் டைபஸ் என்ற பாக்டீரியா பரவல் திருப்பத்தூரில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.