News January 6, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஸ்கரப் டைபஸ் பரவல் இல்லை

image

திருப்பத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதனால் ‘ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா பரவுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இந்த வகை வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், ஸ்கரப் டைபஸ் என்ற பாக்டீரியா பரவல் திருப்பத்தூரில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 9, 2025

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ஆட்சியர்

image

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில், இன்று (09.01.2025) திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

News January 9, 2025

மகள் உயிரிழப்பில் மர்மம்: தந்தை போலீசில் புகார்

image

ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளந்தென்றல் மற்றும் கடலரசி மருத்துவர்களான இருவருக்கும் , குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடலரசி இளந்தென்றலின் வீட்டில் விஷம் குடித்துவிட்டு இருந்துவிட்டதாக கடலரசியின் குடும்பத்தினருக்கு இளந்தென்றல் தெரிவித்தார். எனவே, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடலரசியின் தந்தை ஆம்பூர் கிராமிய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News January 8, 2025

திமுக நிர்வாகி மீது நில அபகரிப்பு புகார்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இடையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, அந்த நிலத்தை வாணியம்பாடியை சேர்ந்த திமுக உறுப்பினர் ஜெகன் என்பவர் நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுவதாக இன்று நாகாராஜின் குடும்பத்தினர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர்.