News December 5, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பதிவு நிலவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வடபுதுப்பட்டு 16.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம் ஆம்பூரில் 12.60 மி மீ, வட புதுப்பட்டு 16.40 மி மீ, ஆலங்காயம் 10 மி.மீ, வாணியம்பாடியில் 6.10 மி.மீ, நாட்றம்பள்ளியில் 3.40 மி.மீ, கேத்தாண்டபட்டியில் 6.30மி.மீ, திருப்பத்தூரில் 5.70மி.மீ ஆகிய இடங்களில் மழை பெய்தது பதிவாகியுள்ளது.
Similar News
News December 4, 2025
திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
திருப்பத்தூரில் 18வது நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருப்பத்தூர் ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி திம்மானமுத்தூர் வளாகத்தில் 06/12/2025 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் கிராமங்கள் திம்மானாமுத்தூர் குஸ்தம்பள்ளி குருகபள்ளி பசிலிகுட்டை பம்பாகுட்டை அனேரி தாதனவலசை ராச்சாமங்கலம் விநாயகபுரம், போயர் வட்டம் ஜம்மனபுதூர், புதூர் பூங்குளம், குமரன்நகர் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
News December 4, 2025
திருப்பத்தூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருப்பத்தூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!


