News April 26, 2025
திருப்பத்தூர் பெயர் காரணம்!

திருப்பத்தூர் பெயருக்கு பின்னால் பல காரணங்களுக்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் இதற்கு “திருப்பத்தூர்” என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், திருவனபுரம் என்று அழைக்கப்பட்டு வந்ததை விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
உங்களைப்போல் உங்கள் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. https://umis.tn.gov.in/ இந்த இணைதளத்தில் இந்தாண்டுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
திருப்பத்தூர்: பிறந்த 3நாள் குழந்தை உயிரிழப்பு!

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி- அகிலா தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை சரி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று (டிச.8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.


