News April 23, 2025
திருப்பத்தூர்: பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம்.
Similar News
News October 15, 2025
திருப்பத்தூர் காவல்துறைசார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் (15அக்) திருப்பத்தூர் மாவட்ட, திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு எச்சரிக்கை பதிவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அருகில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
News October 15, 2025
திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு காவல் துறை சார்பில் இன்று இணையவழியில் விழிப்புணர்வு புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி குழந்தைகளை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை, தற்போது மழை காலம் என்பதாலும் நீர்நிலைகள் நிரம்பி அபாயம் உள்ளதாலும் சிறுவர்கள் ஏரி குளம் குட்டை கிணறு நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அதில் இருந்தது.
News October 15, 2025
திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <