News April 15, 2024
திருப்பத்தூர்: தூக்கி வீசப்பட்ட பணம்

வாணியம்பாடி தாலுகா பெத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.2.38 லட்சத்தை வீசிவிட்டு கட்சி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். இவர்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையிலான குழு பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
திருப்பத்தூரில் தூக்கில் தொங்கிய தம்பதி

ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சகாதேவன் (50) மற்றும் மேரி (எ) தேவி (45). இத்தம்பதி இன்று (டிச.23) அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
திருப்பத்தூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 23, 2025
திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<


