News April 25, 2025
திருப்பத்தூர் சுவாமி மலை ட்ரெக்கிங்

திருப்பத்தூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக ஏலகிரி சுவாமி மலை உள்ளது. வனத்துறை மூலம் மங்கலம் கிராமத்தில் தொடங்கும் இந்த மலையேற்றம் புது அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.499 வசூலிக்கப்படும் நிலையில், https://www.trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் போகலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க.
Similar News
News April 26, 2025
திருப்பத்தூர் பெயர் காரணம்!

திருப்பத்தூர் பெயருக்கு பின்னால் பல காரணங்களுக்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் இதற்கு “திருப்பத்தூர்” என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், திருவனபுரம் என்று அழைக்கப்பட்டு வந்ததை விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
உங்களைப்போல் உங்கள் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள இதனை ஷேர் பண்ணுங்க!
News April 26, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான்.(SHARE IT).
News April 26, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் கோட்டை ஈஸ்வரன் கோயில்

திருப்பத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.