News August 6, 2024
திருப்பத்தூர் சாதிவெறி தாக்குதலை கண்டித்து மனு

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ராமநாயக்கன் பேட்டையில் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலை கண்டித்து இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதி வெறி தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News November 25, 2025
உமராபாத் காவல்நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் உட்கோட்டத்திற்குட்பட்ட உமராபாத் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V சியாமளா தேவி இன்று (நவ.25) நேரில் பார்வையிட்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றியும் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
News November 25, 2025
குடும்ப நல கருத்தடை சிகிச்சை பிரச்சார ஊர்தி

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் புதிய உணர்வு மாற்றத்திற்கான முன் முயற்சி 4.0 துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைத்ததை தொடர்ந்து குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த பிரச்சார ஊர்தி இன்று (நவ.25) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவங்கி வைக்கப்பட்டது.


