News March 25, 2024
திருப்பத்தூர்: எல்ஐசி அலுவலகத்தில் அடிதடி

வாணியம்பாடியில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி முகவருக்கும் கிளை மேலாளருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் எல்ஐசி முகவர் இருசப்பன் என்பவரை மூக்கு மீது குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 19, 2025
ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு
News April 19, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் குரூப் 4 மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்வானது வருகின்ற 22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இத்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.