News March 26, 2025
திருப்பத்தூர்: ஊரை விட்டு 10 குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் மூன்று குடும்பங்களை 10 நாட்களாக ஊரை விட்டு ஒதுக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிழாவின்போது கோயில் அருகில் கூட வரக்கூடாது வந்தால் என்ன நடக்கும் தெரியாது என மிரட்டும் நிர்வாகிகள். குடிநீர் எடுக்க கூட செல்ல முடியாமல் அவதிப்படுவதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு.
Similar News
News September 16, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் இங்க போங்க

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
BIG BREAKING: ஆம்பூரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் இன்று (செப்.16)ஆம்பூர் புதுமண்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 16, 2025
திருப்பத்தூரில் வெளுத்து வாங்க போகும் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.