News April 21, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்-21) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் எவ்வித அச்சமும் இல்லாமல் இவர்களிடம் எந்த ஒரு புகாரும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
திருப்பத்தூர்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. திருப்பத்தூரில் மட்டும் 24 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 4, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் வரும் நவ.8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுக்கா, கெஜல்நாயக்கன்பட்டி, ஆம்பூர், மராபாத், வாணியம்பாடி, ஆவரங்குப்பம், நாட்றம்பள்ளி, நியாய விலை கடைகளில் குடும்ப அட்டையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
News November 4, 2025
திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடூரம்!

ஜோலார்பேட்டை அடுத்த கலர் வட்டம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, (நவ.2) அன்று பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வைத்து ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லரசை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த நபரை நேற்று (நவ.3) போலீசார் சிறையில் அடைந்தனர்.


