News April 22, 2025
திருப்பத்தூர் அருகே வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூரை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், அவருக்கு நீதிபதி 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News April 22, 2025
திருப்பத்தூர் : மாற்றம் வேண்டுமா இங்கு போங்க

பிரம்மா செய்த தவறால் சிவனுக்கு கோவம் வந்து பிரம்மாவை சபித்தார். சாபத்தை நீக்க கோயில்களுக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் வந்து அருகேயிருந்த குளத்தின் நீரை வழங்கி சிவனை வழிபட்டார் . அதனால சிவன் சாபத்தை நீக்கினார். அதன்பின் இந்த இடம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது. இந்த கோயிலில் தரிசித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமென்பது நம்பிகை, மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பகிரவும்.
News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு <
News April 22, 2025
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 21) மாலை ஹவாரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஜோலார்பேட்டை வரும் ரயில்களை சோதனை நடத்திய போது பொது பெட்டியில் 4 மூட்டையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 7 லட்சம். இதனை சென்னை போதை பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.