News August 10, 2024
திருப்பத்தூர் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கோட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்கப்படுகிறது. இதனை தங்கள் வீடுகளின் அருகே உள்ள அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் www.epostoffice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
திருப்பத்தூர்: தும்மியதால் சிறுவன் பரிதாப பலி!

நாட்றம்பள்ளி அடுத்த மயிலாரம்பட்டி பகுதியில் சிலம்பரசன் என்பவர், நேற்று(டிச.23) இருசக்கர வாகனத்தில் தனது குடுத்தினருடன், சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக, சிலம்பரசனுக்கு தும்மல் வந்த நிலையில், நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், சாலையோர மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிலம்பரசனின் மகன் அஸ்வினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
News December 23, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (23-12-2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களின் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது.
News December 23, 2025
திருப்பத்தூர்: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் இங்கு <
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT


