News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News October 22, 2025
ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆணையாளர் முத்துசாமி சந்திப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆம்பூர் நகராட்சிக்கு புதிய ஆனையாளராக பொறுப்பேற்ற முத்துசாமி அவர்கள் (இன்று அக்.22)ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் அவர்களை எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் ஆம்பூர் நகராட்சி கணக்காளர்கள் மதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
News October 22, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பள்ளி முடிவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்களை வீட்டிற்கு பாதுகாப்புடன் அனுப்புமாறு உத்தரவிட்டார். எந்த வித காரணத்திற்கு சிறப்பு வகுப்புகளை ஏதும் இன்று அக்.22 மாலை எடுக்கக் கூடாது என்பது மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
News October 22, 2025
எஸ்.பி அலுவலகத்தில் நடைப்பெற்ற குறைதீர்வு கூட்டம்.

திருப்பத்தூரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (அக்.22) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 16 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.