News April 8, 2025
திருப்பத்தூரில் 72 வாகனங்கள் பொது ஏலம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்களை வருகின்ற 16/4/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944244350 மற்றும் https://tiruppathur.nic.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். குறைவான விலையில் வாகனம் வாங்க இது நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
ஜோலார்பேட்டை: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் இன்று (நவ.3) ஜோலார்பேட்டை அருகே ஜே.என்.ஆர் நகர் நாகாலம்மன் கோயில் அருகே சுமார் 1 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது, ஜோலார்பேட்டை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News November 3, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை சிறப்பு திருத்தம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் வரும் நவ.8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுக்கா, கெஜல்நாயக்கன்பட்டி, ஆம்பூர், மராபாத், வாணியம்பாடி, ஆவரங்குப்பம், நாட்றம்பள்ளி, நியாய விலை கடைகளில் குடும்ப அட்டையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.


