News August 2, 2024

திருப்பத்தூரில் 38 கிராம விழிப்புணர்வு

image

திருப்பத்தூரில் உள்ள மலை கிராமங்களில் சுமார் 38 கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு மது விற்பனை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இயங்கி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தகவல் தெரிவித்தார்.

Similar News

News December 3, 2025

திருப்பத்தூர்: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

News December 3, 2025

திருப்பத்தூர் மக்களே ரேஷன் கார்டில் திருத்தமா?

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வட்ட அளவிலான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் 13.12.2025 அன்று காலை 9 மணியளவில் நாட்றம்பள்ளி-சுண்ணாம்பு குட்டை, வாணியம்பாடி-மேல்குப்பம், ஆம்பூர்- சோமலாபுரம் ஆகிய நியாய கடையில் குறைதீர்வு முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்ய பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 3, 2025

திருப்பத்தூர் அருகே சம்பவம்; திருத்தர்ககுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

வாணியம்பாடி அடுத்த கரிமா பாத் பகுதியை சேர்ந்த மோசின் சல்மா தம்பதியினர். இவரது பூட்டிய வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கதவினை உடைக்க முடியாததால் ஜன்னல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி கதவை உடைத்து உள்ள சென்று திருடன் முயற்சித்துள்ளனர். திருட்டுச் சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!