News August 6, 2024
திருப்பத்தூரில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 44-வது வீரவணக்க நாள் (06.08.2024) கடைபிடிக்கப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News December 21, 2025
திருப்பத்தூர்: தாயை தாக்கிய மகன் கைது!

ஆம்பூர் அடுத்த சாத்தம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாய் அன்னபூரணி (வயது 65). ஞானவேல் தினமும் தாயை திட்டியும், தாக்கியும் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அன்னபூரணி உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவேலை கைது செய்தனர்.
News December 21, 2025
திருப்பத்தூர் : டிரைவர் வீட்டில் நகை பணம் திருட்டு

நாட்றம்பள்ளி அருகே எம்ஜிஆர் நகர், பனந்தோப்பை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆந்திராவிலுள்ள குப்பம் பகுதியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ஆந்திரா சென்ற தம்பதியினர், நேற்று (டிச.20) திரும்பி வந்து பார்த்து போது வீட்டில் உள்ள 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுக்குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
திருப்பத்தூர்: கண்காணிப்பு பணியில் 272 காவலர்கள்

திருப்பத்தூரில் சார்பு ஆய்வாளர் தேர்வு இன்று (டிச.21) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தேர்வு மையங்களில் சட்டம்–ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தேர்விற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தலைமையில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 272 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


