News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 5, 2025
திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜுலை-04) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக விருது மற்றும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 11-07-2025 அன்றுக்குள் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <