News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 20, 2025
கட்சி தாவினார்: அதிமுகவில் இணைந்த பாமகவினர்!

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன், சின்ன மூக்கனூர் ஊராட்சி பாமக வார்டு உறுப்பினராக உள்ள நிலையில், தற்போது, வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் பாமகவில் இருந்து விலகி முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் இன்று (நவ.19) அதிமுகவில் இணைந்தார்.

News November 19, 2025
பெங்களூரில் கொள்ளை, வாணியம்பாடியில் தீவிர சோதனை!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஏடிஎம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஏழு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதால், இது தொடர்பாக இன்று (நவ.19) திருப்பத்தூரில் வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வரக்கூடிய வாகனங்களை காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்தார்கள்.