News August 27, 2024

திருப்பத்தூரில் வழக்குகள் குறித்து எஸ்பி ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா, புகையிலை விற்பனை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Similar News

News November 20, 2025

திருப்பத்தூர்: போக்குவரத்து காவல்துறையின் அறிவுரை!

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஆணையர் தினகரன், இன்று (நவ.20) போக்குவரத்து காவல் துறையில் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம். அலட்சியமாக செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கவனமுடன் வாகனத்தை இயக்குவோம் விபத்தை தவிர்ப்போம். என்று அறிவுரை.

News November 20, 2025

திருப்பத்தூர் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் விரைவாக (20-11-2025 க்குள்) அமைக்க வேண்டும். அமைத்தவர்கள் உடனடியாக தகவல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற முதன்மை அலுவலர் இளவரசி-க்கு தெரிய படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

மாதனூர்: பைக் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

image

திருப்பத்தூர், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் உடையராஜ் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராஜு மகன் ஜீவா(17) என்ற சிறுவன் கடந்த 16 தேதி மாதனூர் நோக்கி பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. பின், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீவா, சிகிச்சை பயனின்றி இன்று (நவம்பர்-20) காலை உயிரிழந்தார். இதுகுறிப்பு ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!