News August 7, 2024

திருப்பத்தூரில் வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆவணங்கள், கோப்புகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, வழக்குகளை நிலுவையில் இல்லாதவாறு முடிக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடன் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இருந்தார்.

Similar News

News November 16, 2025

நரியம்பட்டு: ஆட்டோ கவிழ்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்!

image

உமராபாத் பகுதியை சேர்ந்த நிஷாத் அகமத் வயது (65) கூலி தொழிலாளி. நேற்று (நவம்பர்-15) நரியம்பட்டு ஊராட்சி ராமச்சந்திரபுரம் பகுதியில் ஆட்டோவில் வந்து போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்தில் உயர் இழந்தார். இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த முருகேசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலனுக்காக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ-16) காவல்துறை வலைதள பக்கத்தில். “வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்” என அறிவிக்கப்பட்டது.

News November 16, 2025

திருப்பத்தூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

error: Content is protected !!