News December 6, 2024
திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News December 2, 2025
ஆம்பூர்: திருமணம் ஆகவில்லை ஏக்கத்தில் தற்கொலை

ஆம்பூர் இந்திரா நகர் ஜவஹர்லால் நேரு நகர் பகுதி சேர்ந்த பாலாஜி (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை என்கின்ற ஏக்கத்தில் (நவ.30) மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 1, 2025
திருப்பத்தூர் குறைத்தீர்வு கூட்டத்தில் 363 மனுக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.1) மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிடமிருந்து பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை 363 மனுக்களை ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
News December 1, 2025
திருப்பத்தூரில் நாளை தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருப்பத்தூர் மாவட்டம்(டிச.01) முதலமைச்சரின் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் நேரடியாக அத்தியாவசிய குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது நாளை (டிச.2 மற்றும் டிச.3 )ஆகிய இரு தினங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.


