News April 29, 2025

திருப்பத்தூரில்  மாவட்ட காவல் துறை அறிவிப்பு 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை வெளியிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்துவது கவனத்தை சிதறடிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. “உங்கள் உயிர் மதிப்புடையது, ஒரு மெசேஜ் அல்லது அழைப்பு உங்கள் வாழ்க்கையைவிட முக்கியமல்ல” என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Similar News

News April 29, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது. 

News April 29, 2025

திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 18- 25 வயது வரை உள்ள பெண்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த பெண்களுக்கு நாளை (30-04-2025) திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாத ஊதியம் ரூ.16,500 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04179-222033. அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க. 

News April 28, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலிசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 28 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர் இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!