News August 9, 2024
திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 21, 2025
திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுமி காயம்

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் யாமினி (17). இவர் இன்று எதிர்பாரா விதமாக கீழே கிடந்த பாம்பின் மீது மிதித்ததில், அந்த பாம்பு அவரது காலில் கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், கடித்த பாம்பினை பையில் போட்டுகொண்டு, சிறுமியையும் அழைத்து கொண்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு அந்த பாம்பை மருத்துவர்களிடம் காண்பித்து சிறுமிக்கு சிகிச்சை வழங்கினர்.
News October 20, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்-20 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.