News April 25, 2025

திருப்பத்தூரில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பத்தூர் – 04179 221320, ஆம்பூர் – 04174 246204, வாணியம்பாடி – 04179 235100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

Similar News

News December 10, 2025

திருப்பத்தூர்: 1208 புத்தகங்கள் விற்பனை.. அறிவிப்பு

image

திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழா 10 நாட்களில் இருந்து 12 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், 11-ஆம் நாளான நேற்று (டிச.9) 1208 புத்தகங்கள் 1,20,517 ரூபாய்க்கு விற்பனையானது என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (டிச.10) அறிவித்தார்.

News December 10, 2025

திருப்பத்தூர்: எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (டிச.10) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்ற இக்குறைதீர்வு கூட்டத்தில் மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News December 10, 2025

திருப்பத்தூர்: பொதுமக்கள் காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை நாள்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (டிச-10‍) “விதி பின்பற்றினால் விபத்து விலகும்.” என செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம், நமது அலட்சியம் பெரும் விபத்தை ஏற்படுத்தும், என பதிவிட்டுள்ளனர்.

error: Content is protected !!