News August 15, 2024
திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறும் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் ஏராளமான போலீசார், விழா நடைபெறும் விளையாட்டுத் திடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 26, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் அறிவுரை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர்-26) அவமரியாதை மற்றும் இழிவான அணுகு முறைகள் பொறுத்துக் கொள்வதாலும், மன்னிப்பதாலும் தான் பாலியல் குற்றங்கள் நிகழ்கிறது என்றும். பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும், பெண்களுக்கு எதிரான புகார்களுக்கு 181 என்ற எண்ணை அழைக்கவும். இதனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 26, 2025
திருப்பத்தூரில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் (25நவம்பர்)மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்ட அரங்கத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் கல்லூரி படிப்பிற்காக கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவர்களுக்காக சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது (நவம்பர் 26) ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாம் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் இந்த முகாமில் பங்கு பெற்று கல்வி கடனை பெற்றுக் கொள்ளலாம்
News November 26, 2025
திருப்பத்தூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

திருப்பத்தூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, <


