News March 20, 2024

திருப்பத்தூரில் பயணிகள் அவதி

image

கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .

Similar News

News December 12, 2025

திருப்பத்தூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இத்திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News December 12, 2025

திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

News December 12, 2025

திருப்பத்தூர்: விவசாய நிலத்தில் கிடந்த பெண் சடலத்தால் பரபரப்பு

image

திருப்பத்தூர், ஜவ்வாது மலைக்குட்பட்ட புதூர்நாடு, நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம், மனைவி சின்னக்காளி (40). இவரது கணவர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று (டிச.11) சின்னக்காளி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!