News January 2, 2025

திருப்பத்தூரில் நாளை முதல் பொங்கல் பரிசுக்கு டோக்கன் 

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (02.01.2025) நடைப்பெற்றது. இதில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன் நாளை முதல் (03.01.2025) விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் இணை இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News December 17, 2025

திருப்பத்தூர்: காவல்துறை மாணவிகளுக்கு விழிப்புணர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் இன்று (டிச.17) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி தலைமையிலான காவல்துறையினர், திருப்பத்தூர் ஹோலி கிராஸ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், அவசர உதவி எண்கள் 181, 1098, ‘காவல் உதவி செயலி’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News December 17, 2025

திருப்பத்தூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 17, 2025

திருப்பத்தூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

திருப்பத்தூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!