News May 10, 2024
திருப்பத்தூரில் நாளை கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நாளை (மே 11) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாணவர்களின் சந்தேகங்களை நீக்கி உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்யும் தகவல்களை தெளிவுபடுத்துகின்றனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 27, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-27) குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா மிக அவசியமான ஒன்றாகும். சிசிடிவி கேமராவை பொருத்துவோம். பாதுகாப்பை உறுதி செய்வோம். என பதிவிட்டுள்ளனர்.
News November 27, 2025
திருப்பத்துார்: குண்டு வெடிப்பது போல REEL எடுத்ததால் கைது!

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர், ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்று, பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, குண்டு வெடிப்பது போல் வெடிக்க செய்து வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரித்து ஜோலார்பேட்டை போலீசார், குமரேசனை நேற்று (நவ.26) கைது செய்தனர்.
News November 27, 2025
திருப்பத்தூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<


