News January 22, 2025
திருப்பத்தூரில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் கோட்டத்திக்குட்பட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், மின்னூர், ஆலாங்குப்பம், நாச்சியார்குப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, வீராங்குப்பம், குமாரமங்கலம், மணியார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (23.01.2025) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
பாச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

குடியாத்தம் அடுத்த சந்தன பேட்டை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35) இவர் இன்று (டிச.4) பாச்சல் அருகே ஆசிரியர் நகரில் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 5, 2025
திருப்பத்தூர்: விளையாட்டு வாக்கில் தின்னரை குடித்த குழந்தை!

ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்பியம்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் அபினாஷ் இவரது மகன் பிரனாப் (வயது 2 1/2) வயது குழந்தை நேற்று (டிச.4) தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க வைத்து இருந்த தின்னர் குடித்து மயங்கி விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பெற்றோர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 5, 2025
திருப்பத்தூர்:இரவு ரோந்து பணி விபரம்

இன்று (டிச.04) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு அழைக்கலாம்.


