News August 4, 2024
திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூர் தேர்வர்களே தெரிந்து கொள்ளுங்கள் – தேதி மாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் ‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (நவ.29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, டிசம்பர்.6-ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் இன்று (நவ.28) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு எழுதும் திருப்பத்தூர் மாணவர்கள் இந்த அறிவிப்பினை தெரிந்து கொள்ளுங்கள் உடனே மற்ற மாணவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-28) “உனது பாதுகாப்பு உன் கையில் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவதை மறவாதீர்…! என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
News November 28, 2025
திருப்பத்தூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <


