News August 10, 2024
திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 18, 2025
திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (செப்.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புக்கொள்ளலாம்
News September 17, 2025
ஆம்பூர் கலவர வழக்கு: 7 பேர் ஜாமீனில் விடுதலை

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த மாதம் (ஆக.28) நடைபெற்ற கலவர வழக்கில், கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு, இன்று (செப்.17) சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமினில் விடுவிக்கப்பட்டவரகள்:
1. ஃபைரோஸ்
2. அதீக் அஹமது
3. சான் பாஷா
4. முனீர்
5. தப்ரேஸ்
6. நவீத் அஹமது
7. அயாஸ் பாஷா
News September 17, 2025
திருப்பத்தூர்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 2.சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100, 3.வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு) கடைசி தேதி: செப்டம்பர் 28 <