News September 14, 2024
திருப்பத்தூரில் இன்று TNPSC தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மொத்தம் 9521 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுகள் மாவட்டம் முழுவதும் உள்ள 36 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுகளை முறையாக நடத்த மாவட்ட நிர்வாக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூர் போலீசார் எச்சரிக்கை

திருப்பத்தூர் காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.21) high beam light -யை பயன்படுத்துவதால் சில நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே தேவையற்ற தருணங்களில் பதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் திருப்பத்தூர் காவல்துறை பதிவிட்டுள்ளது.
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.