News May 10, 2024
திருநெல்வேலியில் 116 பள்ளிகள் அசத்தல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் 93.04% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நெல்லையில் 25 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 116 பள்ளிகள் 100/100 தேர்ச்சி பெற்று சென்டம் வாங்கி அசத்தி உள்ளனர்.
Similar News
News November 20, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 20, 2025
நெல்லையில் கூட்டுறவு அமைச்சர் வழங்கிய கடன் தொகை

பாளை நேருஜி கலையரங்கத்தில் இன்று கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரிய கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கிய நிலையில் மொத்தம் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிர் கடன் உள்பட மொத்தம் 12170 உறுப்பினர்களுக்கு 107.71 லட்சம் ரூபாயில் கடன் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
News November 20, 2025
பாளையங்கோட்டை வாக்காளர்கள் கவனத்திற்கு!

மாநகராட்சி ஆணையாளரும் பாளை சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலருமான மோனிகா ராணா விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2025 தொடர்பாக பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் திருப்பி அழிப்பதற்கு வசதியாக வாக்கு சாவடி நிலங்களில் 22, 23ஆம் தேதி காலை 8:00 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். *ஷேர்


