News August 16, 2024
திருத்தணி: ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளி மாநில மற்றும் உள் மாநில வாகனங்கள் மீது 1221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. மேலும் விதிகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.68 லட்சம் அபராதம் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
Similar News
News December 23, 2025
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருவள்ளுர்: தகுதி வாய்ந்த 2,90,000 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் (டிச.29) முதல் (ஜன.28) வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. எனவே முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.
News December 23, 2025
திருவள்ளூர் மக்களே சொந்த வீடு கட்ட ஆசையா?

சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய 500 ஆண்டுகள் பழைமையான கோயில் ஆகும். இந்த முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக விளங்குகின்றது. இங்கு வரும் பக்தர்கள் நிலம், வீடு, மனை என பூமி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகி வணங்கி சென்றால் உடனே நிறைவேறிவிடும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.
News December 23, 2025
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (டிச.30) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.


