News March 21, 2025

திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக்கொலை

image

திருவள்ளூர் – திருத்தணி, நார்த்தவாடா பகுதியில் இன்று (மார்.21) காலை லோகேஷ் (19) என்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கும்பல் குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

திருவள்ளூர் கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 22, 2025

தொழிலாளி சடலமாக மீட்பு

image

வீரராகவர் கோவில் குளம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பற்றி விசாரித்த பொழுது இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர் (தொழிலாளி) என்பதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு கால்வாய் அருகே படுத்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

News March 21, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!