News June 28, 2024
திருட்டு வழக்கில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத்குமார் மற்றும் இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ரவுடி வினோத்குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இம்ரான்கான் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், 2 இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
Similar News
News December 3, 2025
திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி-பாலக்காடு ரயில் புறப்படும் இடம் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், வழக்கமாக புறப்படும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படாமல், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!