News June 25, 2024
திருடுபோன 120 செல்போன்கள் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டை: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு<
News December 22, 2025
ராணிப்பேட்டை: மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (37) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் நேற்று டிச.21 ல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
அரக்கோணம்: தெரு நாய்க்கடியால் இளைஞர் பரிதாப பலி!

அரக்கோணம், மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் திவாகர் (19) இவர் +2 வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. முறையான சிகிச்சை பெறாமல் இருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 21) திடீரென காய்ச்சல் அதிகமானது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, ரேபிஸ் நோய் தாக்கி இருப்பது தெரிந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


