News April 11, 2025

திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

image

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

Similar News

News April 19, 2025

தூத்துக்குடி:மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி

image

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து இம்மாதம் 25ஆம் தேதி முதல் மே  மாதம் 15-ஆம் தேதி வரை இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தடகளம் கைப்பந்து கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஹாக்கி மட்டும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அணுக ஆட்சியர் இளாம்பகவத் இன்று கேட்டுள்ளார்.

News April 19, 2025

தூத்துக்குடி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

News April 19, 2025

கீழஈராலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

கீழ ஈராலில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் ஏப்.22 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வங்கி, காப்பீட்டு நிறுவனம், மென்பொருள் நிறுவனம் கலந்து கொள்ள இந்த முகாமில் 10 முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9442961164.7812877818 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!