News August 3, 2024
திருச்செந்தூர் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

திருச்செந்தூரின் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். ஆடிப் பெருக்கை ஒட்டி இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சென்று முருகனை வழிபட்டனர்.
Similar News
News December 18, 2025
தூத்துக்குடி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 7 ஆண்டுகள் சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் இவரை கைது செய்தனர். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News December 18, 2025
தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு… தட்கல் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அறிவிப்பு வெளியானது. அதில், தமிழக மின்பகிர்மான தலைமையகமானது நடப்பு ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 10,000 விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில் மின் தேவைக்கேற்ப விவசாயிகள் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுக கூறப்பட்டுள்ளது.
News December 18, 2025
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த நிலையில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


