News June 26, 2024

திருச்செந்தூர் கோவிலில் திருவிழா அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாத வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 9, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் நெல்லை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 9, 2025

தூத்துக்குடியில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இ-ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 9, 2025

தூத்துக்குடி தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்திற்கும், நாசரேத் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாக ரயில்வே போலீசார் மற்றும் நாசரேத் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி போலீசார் இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!